இளைஞர் கூட்டமைப்பில் முன்வைக்கப்படும் கொள்கைகள்:-

1. தனிப்பட்ட ஒருவரை முன்னிறுத்தி அரசியல் செய்யாமல், கூட்டுத் தலைமையை உருவாக்கி இளைஞர்களை முன்னிறுத்தி அரசியல் களம் காணுதல்.

2. ஜாதி, மதம், இனம், மொழி, நிறம் என எந்த பாகுபாடும் இல்லாமல் வேற்றுமைகளை கடந்த ஒற்றுமையான நல்ல சமுதாயத்தை உருவாக்குதல்.

3. விவசாயத்தை காத்தல்; புதிய உக்திகள் மூலம் விவசாயத்தை முன்னேற்றுவது. விவசாயம் சார்ந்த படிப்புகளை ஆதரித்தல்.

4. புகை, மது போன்றவற்றை கட்டுபடுத்த தேவையான விழிப்புணர்வு, விதிகள் போன்றவை கடுமையாக்கப்பட்டு . படிப்படியாக ஒழிக்கப்பட வேண்டும்.

5. ஊழலை முற்றிலும் ஒழிக்க, மக்களிடம் சமூக மாற்றம் உருவாக்க அரசியல் பிரதிநிதிகள் முன்னோடியாக இருக்க வேண்டும்.

6. இலவசங்களுக்கு பதில் மக்களின் வாழ்வாதாரம் உயர வழிவகை செய்யப்பட வேண்டும்.

7. கல்வியின் தரம் மற்றும் அரசு பள்ளிகளின் தரம் உயர்த்த பட வேண்டும். பல புதிய அரசு பள்ளிகள் உருவாக்கப்பட்டு. அறியாமை என்ற இருள் நீங்க அனைவருக்கும் அடிப்படை சட்டம், அரசியல் உரிமை, விவசாயம் போன்றவை துவக்கப்பள்ளி முதல் பயில்விக்க வழி வகை செய்ய பட வேண்டும்.

8. நீராதாரம், இயற்கை வளங்கள் காக்க உரிய திட்டங்கள் வகுக்கப்படும்.

9. தேசிய நதிநீர் இணைக்க மத்திய அரசை வலியுறுத்த வேண்டும். அதற்கு முன்மாதிரியாக தமிழகத்தில் உள்ள நதிகளை இணைப்பதற்க்கான வழிவகைகள் செய்யப்பட வேண்டும்.

10. தமிழர் சார்ந்த பிரச்சனைகள் மீனவர் பிரச்சனை, நதிநீர் பிரச்சனை, இலங்கை தமிழர் ஆதரவு போன்றவை மத்திய அரசோடு இணைந்து சுமூக தீர்வு எட்டப்பட வேண்டும்.

11. தனிப்பட்ட அரசியல் தலைவர்களையும் மற்றும் கட்சிகளையும் இகழ்வாக பேசும் காழ்ப்புணர்ச்சி அரசியல் கூடாது.

12. ஆண்களுக்கு நிகராக பெண்களும் சம அளவில் இடம் பெற வேண்டும். அதற்கான பாதுகாப்பு உறுதி செய்யப்படும். பெண்கள் இடம்பெறாத பட்சத்தில் மற்றவர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்படும். மாற்று திறனாளிகள் மற்றும் மூன்றாம் பாலினத்தை சார்ந்தவர்கள் முன்வரும் பட்சத்தில் தகுந்த வாய்ப்புகள் வழங்க வழிவகை செய்யப்படும்.

13. அனைவருக்கும் தாய்மொழி பற்று அவசியம். அதனால், தாய்மொழி கற்பது அவசியம் எனவும், இரண்டாவது மொழியாக ஆங்கிலத்தையும் கற்க வலியுறுத்தப்பட வேண்டும். மற்ற மொழிகளை கற்பது அவரவர் விருப்பம். வேறு மொழிகளை கட்டயாமாக திணிப்பது தவறு.

14. பொது மக்களுக்கு இடையூறாக போராட்டம், கடைஅடைப்பு, சாலை மற்றும் ரயில் மறியல் போன்ற மக்களை அவதிக்குள்ளாக்கும் போராட்டங்களை ஆதரிக்கப்பட மாட்டது. விழிப்புணர்வு பேரணி, இடையூறு இல்லாமல் கூட்டம் போன்றவற்றை தகுந்த அனுமதி பெற்று நடத்த ஏற்பாடு செய்யலாம்.