இளைஞர் கூட்டமைப்பின் சார்பில் பிரச்சார விதிமுறைகள்:-

1. துண்டு பிரசுரம்: இளைஞர் கூட்டமைப்பு பற்றிய கொள்கைகள் / வாக்குறுதிகள் மற்றும் வேட்பாளர் அறிமுகம், மக்களுக்கு செய்த நலப்பணிகள், தொகுதி சார்ந்த வாக்குறுதிகள் போன்றவை அடங்கிய துண்டு பிரசுரத்தை மக்கள் கூடும் இடங்களில் விநியோகம் செய்யலாம்.

2. சமூக வலை தளங்கள் மூலம் கொள்கைகளை முன்னிறுத்தி பிரச்சாரம் செய்தல்.

3. காணொளிகள் (video) மற்றும் உரையாடல் தொகுப்புகளை (audio) உருவாக்கி அதன் மூலம் பிரச்சாரம் செய்தல்.

4. இளைஞர்கள் மற்றும் சமூக நலம் சார்ந்த இயக்கங்கள் சார்பில் கூட்டங்கள் நடத்தலாம்.

5. தெருமுனை பிரச்சாரங்கள் நடத்தலாம்.

6. (பொது இடங்களில்) சுவரொட்டி மற்றும் ப்ளெக்ஸ் போன்றவைகளை கொண்டு பிரச்சாரம் மற்றும் விளம்பரம் செய்வது அறவே தவிர்க்கப்பட வேண்டும்.

7. கொள்கை வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தி செல்லலாம்.

குறிப்பு : பிரச்சாரங்கள் மக்களை தொந்தரவு செய்யும் விதத்தில் இல்லாமல் இருக்க வேண்டும். மேலும், கூட்டங்கள் நடத்த ஏற்பாடுகள் செய்யும் பொழுது தகுந்த அனுமதி பெறுதல் அவசியம். மக்களை அவதிக்குள்ளாக்காமல் பிரச்சாரங்களை மேற்க்கொள்ள அறிவுறுத்தப் படுகிறது.