இளைஞர் கூட்டமைப்பில் வேட்பாளருக்கு தேவையான தகுதிகள்:

1. சுய ஒழுக்கம்: பொது வாழ்வில் ஈடுபடுவதால், மக்களுக்கு எடுத்துகாட்டாக இருக்கும் வகையில் சுய ஒழுக்கம் தேவை. புகை, மது போன்ற பழக்கங்கள் இருக்க கூடாது. தவறு செய்ய வாய்ப்பு கிடைக்கும் போதும் தவறு செய்யாமல் இருக்கும்படியான சுய ஒழுக்கம் தேவை.

2. மக்களுக்கு தொண்டு செய்யம் நோக்கம் தவிர வேறு எந்த பிரதிபலனும் எதிர்பார்க்க கூடாது. உதாரணம்: பணம் சம்பாரிப்பது, பதவியாசை, சொந்த விருப்பு வெறுப்புகள் போன்ற பல.

3. மக்களுக்கு சமூக தொண்டு செய்ய முன் நின்று செயல்படும் எண்ணம்.

4. குற்ற பின்னணி இல்லாமல் இருக்க வேண்டும். தன்னுடைய குடும்ப சொத்துக்கள் பற்றிய விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும். முறையான வருமான வரி செலுத்துபவராக இருத்தல் வேண்டும்.

5. பொதுநலன், நேர்மை, எளிமை, நிதானமாக ஆராயும் திறன், ஜாதி, மதச்சார்பற்று செயல்படுதல்.

6. அனைவரின் கருத்துக்களுக்கும் மதிப்பளித்தல். அனைவரின் கேள்விகளுக்கும் பொறுமையாக பதில் அளித்தல்.

7. தலைமை பண்பு / நிர்வாக திறமை / ஆளுமைதிறன்.

8. தேர்வு செய்த பின்னர், வேட்பாளர் தவறானவர் என தெரிய வந்து, அது நிருபிக்க பட்டால், வேட்பாளரே விலகி செல்ல வேண்டும்.

வேட்பாளர்கள் பொது தேர்தலுக்கு செலவு செய்ய குறைந்தபட்ச நிதி மற்றும் அதிகபட்ச நிதி எவ்வளவு இருக்கலாம்.

குறைந்தபட்ச செலவு செய்யும் நிதி: Rs.50,000

அதிகபட்ச செலவு செய்யும் நிதி: Rs. 5 லட்சங்கள்.